[X] Close

மூன்றாவது முறையாக விஜயுடன் மோதும் ’வில்லன்’விஷால்!

Vijay-wraps-with-Vijay-for-the-third-time


விஜய் நடித்துள்ள மெர்சல் படமும் விஷால் நடித்துள்ள வில்லன் படமும் ஒரே நாளில் ரிலீசாக இருக்கிறது. 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி ரிலீசாக இருக்கிறது. அதே நாள்  இந்தப்படம் கேரளாவிலும் ரிலீசாக இருக்கிறது. கேரளாவில் அக்டோபர்  19ம் தேதி விஷால் வில்லனாக நடித்துள்ள வில்லன் படமும் ரிலீசாகிறது. இந்தப்படத்தில் மோகன்லால் நாயகனாக நடித்துள்ளார். இதனால், கேரள ரசிகர்கள் இரண்டு படங்களையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 


விஜய், விஷால் படங்கள் ஒரே நாளில் மோதிக் கொள்வது இது முதல் முறையல்ல. முன்னதாக விஜய் நடித்த போக்கிரி படம் ரிலீசான அன்று விஷால் நடித்த தாமிரபரணி படம் ரிலீசானது. 2014ம் ஆண்டு விஜய் நடித்த கத்தி ரிலீசான அன்று விஷால் நடித்த பூஜை படம் வெளியானது. தற்போது வில்லன் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக விஷால், விஜயுடன் மோத இருக்கிறார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close