Published : 15,Sep 2022 08:32 AM

பகுதி நேரமாக வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்த பள்ளி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

Pity-what-happened-to-a-schoolboy-who-worked-part-time-in-a-welding-workshop

விளாத்திகுளத்தில் வெல்டிங் பட்டறையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்த 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பால்ராஜ் (24). இவர், விளாத்திகுளம் அரசு மருத்துவமனை ரோட்டில், சொந்தமாக வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவருடைய வெல்டிங் பட்டறைக்கு அருகில் வசித்து வரும் கர்ணமகாராஜன் என்பவரின் மகன் குருமூர்த்தி (15). அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் பள்ளி விட்ட பின்னர். பால்ராஜ் வெல்டிக் பட்டறையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தாக கூறப்படுகிறது.

image

வழக்கம் போல் நேற்று மாலை வெல்டிங் பட்டறைக்கு வந்த குருமூர்த்தி வேலை பார்த்துள்ளார். வெலை முடிந்த பின்னர் குருமூர்த்தி, பொருள்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது, மின்சார சுவிட்சை பெட்டியை காலால் மிதித்தாக தெரிகிறது. இதில் தூக்கி ஏறியப்பட்ட குருமூர்த்தி மயக்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை பால்ராஜ் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவருக்கும் லேசான காயம் ஏற்ட்டது.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குருமூர்த்தியை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து குருமூர்த்தியின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்