Published : 14,Sep 2022 05:49 PM

தாய் தந்தையை இழந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - மூவர் போக்சோவில் கைது

3-arrested-under-POCSO-for-raping-mentally-challenged-girl-at-Nilgiris

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சேலாஸ் மேல்பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த தாய், தந்தையை இழந்த மன நலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் அருகே உள்ள நெடிமந்து பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ஏவல்குட்டன் என்பவரது மகன் சீமராஜ்குட்டன், அவரது நண்பர்களான எமரால்டு முள்ளிமந்துவைச் சேர்ந்த கண்ணன் மகன் முத்துராஜ்(25) மற்றும் உதகை கிளன்மார்கன் மந்து பகுதியைச் சேர்ந்த ராஜ்குட்டன் மகன் பொனிஸ்குட்டன் (28) ஆகியோர் நேற்று மது போதையில் சேலாஸ் பகுதியில் சுற்றித்திரிந்ததாகக் கூறப்படுகிறது.

image

அப்போது குன்னூர் அருகே உள்ள சேலாஸ் மேல்பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த தாய், தந்தையை இழந்த மனநலம் பாதிக்கட்ட சிறுமியை சேலாஸ் பகுதியில் தேயிலை தோட்டத்திற்க்கு அழைத்துச்சென்று மூவரும் பாலியல் வன் கொடுமை செய்துள்ளனர்,

அவ்வழியே வந்தவர்கள் மூவரையும் பிடித்து கொலக்கம்பை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மூவரிடமும் விசாரணை நடைபெற்று வந்தது. பின்பு சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் மூவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்ய குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பின் போச்சோவில் 3 பேரையும் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்