Published : 14,Sep 2022 09:33 AM

வளர்ப்பு நாய்களால் மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படாமலிருக்க, எப்படி வளர்க்கலாம்? #KnowYourDog

how-not-to-let-Pet-dogs-to-bite-others-and-know-their-behaviours

உத்திர பிரதேசத்தில் சிறுவன் ஒருவனை பிட்புல் என்ற வளர்ப்பு நாய் கடித்து, முகத்தில் 150 தையல்கள் போடப்பட்டது. அடுத்து, லிப்டில் சென்றுகொண்டு இருக்கும் போது உரிமையாளர் நாயைப் கையில் பிடித்து இருக்கும் போதே அருகிலிருந்த சிறுவனைப் பாய்ந்து கடித்த வீடியோ வைரலானது. தெருநாய்கள் திடீரென்று கடிக்கும் சம்பவங்கள் போலவே, இப்படி வீட்டில் வளர்க்கும் நாய்களும் சில சமயங்களில் வீட்டில் உள்ளவர்களையோ அல்லது அக்கம்பக்கத்தினரை கடித்துவிடுகிறது.

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளில் முக்கியமானது நாய் தான். குடும்பத்தில் ஒருவராகவே பல வீடுகளில் வளர்க்கப்படுகிறது. நாம் வளர்க்கும் நாயின் இனத்தை மற்றும் அதன் நடத்தையைப் பொறுத்து வெவ்வேறு அணுகுமுறைகளை, நாய் வளர்ப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

வளர்ப்பு நாய்களைப் பொறுத்தவரை, தற்போது அதிகம் வளர்க்கப்படுவது, ஜெர்மன் ஷெப்பர்ட்ஸ், கோல்டன் ரெட்ரீவர்ஸ், பீகிள்ஸ், பொமரேனியன், லாப்ரடோர்ஸ் மற்றும் பிட்புல் இனங்கள் தான். இந்த இன நாய்களைக் கையாளும் போது தேவைப்படும் பல்வேறு அணுகுமுறைகள் கடைப்பிடித்தால் வீட்டில் உள்ளவர்களையோ அல்லது அக்கம்பக்கத்தினரையோ கடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். அதற்கு சில டிப்ஸ்..

image

ஜெர்மன் ஷெப்பர்ட்

சட்டவிரோத போதைப்பொருட்களைக் கண்டறிவதற்கும் மற்றும் பங்கரவாதிகளைக் கண்டறியவும் , இந்த அறிவார்ந்த நாய் இனத்தை காவல்துறையினர் மற்றும் இராணுவ வீரர்கள் மட்டும் வளர்த்து வந்தனர். ஆனால் இப்போது ஏராளமான பொதுமக்களின் வீட்டிலும் செல்லப் பிள்ளை.

ஜெர்மன் ஷெப்பர்ட் இயல்பு தற்காப்பு தான். முதலில் மேய்ப்பன் நாயாக வளர்க்கப்பட்டதால் இன்றளவும் தனது மரபியலைத் தக்க வைத்துக் கொள்கிறது. அதனால் அது எப்போதும் ஆபத்துகளை எதிர்நோக்கி, பாதுகாக்கும் உணர்வுடனே இருக்கும். இதனால் அதற்கு நிறைய உடல் மற்றும் மன பயிற்சிகள் அவசியம். அதனால் ஜெர்மன் ஷெப்பர்ட் வாங்கும் முன் அல்லது அதை வளர்ப்பவர்கள், அந்த நாயுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.

ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை எப்படி பயிற்றுவிப்பது எனப் பல வீடியோக்கள் ஆன்லைனில் உள்ளன. உடல் மற்றும் மனநலம் அதிகம் தேவைப்படும் இத்தகைய நாய்களுக்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. ஒரு பிளாட்டிலோ அல்லது பண்ணையிலோ எப்பொழுதும் சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கும் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் மூர்க்கமானதாக மாறும். எனவே அதை அதற்கு நன்றாக உடற்பயிற்சியும் கொடுத்தால் அவர்கள் அமைதியாக இருக்கும். பின்பு நல்ல ஓய்வு கொடுத்து அதனுடன் விளையாட்டினால் அவை நன்றாக மற்றவர்களுடன் பழக்கும்.

image

பீகில்

பீகிள்கள் அதிக ஆற்றல் கொண்ட நாய் இனம். இவற்றின் மோப்பம் பிடிக்கும் திறன் இணையற்றது என்ற சொல்லலாம். முதலில் வேட்டையாடுபவர்களிடம் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டறிய அவை வளர்க்கப்பட்டன. பீகில் சுற்றியிருப்பவர்களைக் கடித்த சம்பவங்கள் மிகவும் அரிதானவை தான். இருப்பினும் தினசரி நீண்ட நடைப்பயணங்கள் மற்றும் சொல்லுக்கு கீழ்ப்படிதல் போன்ற பயிற்சிகள் சரியாக இருந்தால் பீகிளை கையாளுவது சுலபம்.

image

பிட்புல்

அமெரிக்கன் கென்னல் கிளப் பிட்புல்ஸின் நான்கு துணை இனங்களை வளர்ப்பு இனங்களை அங்கீகரித்து உள்ளது.

-      அமெரிக்கன் பிட்புல் டெரியர்

-      அமெரிக்க புல்லி

-      ஸ்டாஃபோர்ட்ஷையர் புல்டெரியர்

-      அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர்

இந்த இனம் சுற்றியிருப்பவர்களை அதிகம் தாக்குகிறது என்ற சம்பவங்கள் பரவலாக வெளிவருவதால் சில இடங்களில் கருணைக்கொலை செய்யப்படுகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐக்கிய நாடுகளில், இந்த நாய் சண்டைக்காகவே வளர்க்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவும், துரதிர்ஷ்டவசமாகவும், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் சட்டவிரோதமாக நாய்கள் சண்டை பிட்புல் பயன்படுத்தப்பட்டும் வருகிறது என சொல்லப்படுகிறது.

மிகவும் திறமையான நாயானது பிட்புலை முதலில் சுற்றியிருப்பவர்களுடன் நன்றாகப் பழக்க வைக்கவேண்டியது தான் அவசியம். மேலும் அதை கட்டியோ, அடைத்தோ வைத்து வளர்க்கும் போது, சுற்றியிருப்பவர்களைப் பார்க்க நேரும் போது ஆபத்து நேரப் போகிறது என கடித்துவிடும். அதனால் முதலில் வீட்டைச் சுற்றியிருப்பவர்களுடனும், வசிக்கும் பகுதியைப் பரிட்சியமாக வேண்டும்.

image

பொமரேனியன்

இது ஆங்கிலேயர் காலத்தில் தோன்றின இனம். மிகவும் ஈரப்பதமான வானிலை மொமரேனியக்கு செட்டாகாது என்பதால் இந்தியச் சூழலுக்காக வளர்க்கப்பட்டது. உருவத்தில் சிறியது என்றாலும் சமயங்களில் இதனின் குரல் மூர்க்கமானது, அதிக ஆற்றலும் உடையது. இது அதிகமாகக் குரைப்பதால், இது சில சமயங்களில் அண்டை வீட்டாருக்கு எரிச்சலூட்டும். இருப்பினும், தொடர் கவனிப்பு மற்றும் உடற்பயிற்சிகள் குரைப்பதைக் கட்டுப்படுத்த உதவும்.

மற்ற நாய்களைக் காட்டிலும், மற்றவர்களைக் கடிக்கும் வழக்கம் அதிகம் உள்ள நாய் இனம் இதுதான். புதிய நபர்களைச் சந்திக்கவும், பல்வேறு பகுதிகளை நினைவில் வைத்துக் கொள்ளவும் வெவ்வேறு வழிகளில் நடைப்பயணம் அழைத்துச் செல்லவும்.  

image

லாப்ரடோர் மற்றும் கோல்டன் ரெட்ரீவர்

பல குடும்பங்களில் சிறந்த செல்லப்பிராணி இவை இரண்டும் தான். தற்போது நாய் வளர்க்கும் எண்ணம் உள்ளவர்களுக்கும் முதல் சாய்ஸ் லாப்ரடோர் மற்றும் கோல்டன் ரெட்ரீவர் தான்.

இந்த இரண்டு வகை இனமும் தண்ணீரில் நீந்தவும் விளையாடவும் விரும்பம் கொண்டவை. காரணம், தண்ணீரிலிருந்து வேட்டையாடுவதை மீட்டெடுக்கவும், அதை மீண்டும் வேட்டையாடுபவர்களிடம் கொண்டு வரவும் வளர்க்கப்பட்ட இனங்கள் இவை.

இந்த இரண்டு இனமும் நட்பாகவும், பணிவாகவும் இருக்கும். பெரும்பாலும் அந்நியர்களிடமும் அவ்வாறு நடந்துகொள்ளும். சிறந்த மோப்ப சக்தி மற்றும் சாந்தமான இயல்பு கொண்ட இந்த இனத்துக்குத் தினசரி நடைப்பயிற்சி தேவை கூடவே சுற்றியிருப்பவர்களின் பழக்கமும் தேவை. இந்த இனங்கள் மனிதர்களைக் கடிக்கும் நிகழ்வுகள் மிகக் குறைவு ஆனால் சரியாகப் பயிற்றுவிக்கப்படாவிட்டால் ஆக்ரோஷமாகிவிடும்.

எல்லா இன நாய்களுக்குச் சரியான அணுகுமுறையும், பயிற்சியும், சமூகமயமாக்கலும், நல்ல உணவும், அன்புமும், அவசியம். முக்கியமாகச்  அமைதியாகவும் இருக்கும் நாய் தான் சந்தோசமாக இருக்கும் நாய் என்று நாய்களுக்கு பயிற்சிக்கொடுப்பவர்கள் கூறுகிறார்கள்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்