Published : 12,Sep 2022 03:13 PM

பெரியார் சிலைகளில் கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்ககோரிய வழக்கு-தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Tamil-Govt-ordered-to-respond-to-case-seeking-removal-of-blasphemous-words-on-Periyar-idols

தந்தை பெரியார் சிலைக்கு கீழே உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்றக்கோரி தொடரப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தந்தை பெரியாரின் சிலைக்கு கீழே உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்றக்கோரி தெய்வநாயகம் என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற தள்ளுபடி செய்திருந்த நிலையில், அதற்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

image

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சை கிஷண் கவுல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், கடவுள் மறுப்பு கொள்கைகளை கொண்டுள்ள தந்தை பெரியார் சிலைகள் மாடியில் அரசுகளால் பராமரிக்கப்படுகின்றது. அதே நேரம் இந்த வாசகங்கள் கடவுள் நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கிறது. இதை பேச்சுரிமை, கருத்துரிமை என்ற அடிப்படையில் எடுத்துக் கொள்ள முடியாது.

மேலும் பல இடங்களில் பெரியாரின் வாசகங்கள் திரித்து கூறப்பட்டுள்ளது. எனவே இவற்றை அகற்றக் கோரி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

image

மனுதாரர் வாதங்களை கேட்ட பிறகு மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இது தொடர்பாக எதிர்மனுதாரராக தமிழக அரசின் கருத்துகளையும் நாங்கள் கேட்க விரும்புகிறோம். எனவே மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்