Published : 12,Sep 2022 07:28 AM
19 வயதில் அமெரிக்க ஓபனை வென்று வரலாறு படைத்தார் அல்காரஸ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் கார்பியா சாம்பியன் பட்டம் வென்றார். முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற அவர், தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தொடரின் மூன்றாம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் கார்பியா, 5ஆம் நிலை வீரரான நார்வேயின் கேஸ்பர் ரூட் உடன் பலப்பரீட்சை நடத்தினார். கிராண்ட் ஸ்லாம் போட்டியில் முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் இருவரும் களமிறங்கினர்.
விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் முதல் செட்டை 6-4 என அல்காரஸ் கார்பியாவும், இரண்டாவது செட்டை 6-2 என ரூடும் கைப்பற்றினர். மூன்றாவது மற்றும் நான்காவது செட்களை 7-6, 6- 3 என 19 வயதான அல்காரஸ் கார்பியா கைப்பற்றினார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக அவர் பட்டம் வென்று அசத்தினார்.
மேலும் டென்னிஸ் வீரர்களுக்கான உலகத் தரவரிசையிலும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் மிக இள வயதில் நம்பர் 1 வீரர் என்ற இடத்தை எட்டியா சாதனையும் அல்காரஸ் வசம் வந்து சேர்ந்துள்ளது. லீட்டன் ஹெவிட் என்ற வீரர் தனக்கு 20 வயது 9 மாதங்கள் இருக்கும்போது உலகின் நம்பர் ஒன் வீரராக திகழ்ந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. மேலும் பதின்ம வயதில்யே இவ்வளவு பெரிய இலக்கை எட்டி மலைக்க வைத்திருக்கிறார் அல்காரஸ்.