Published : 10,Sep 2022 09:46 PM
ஏழை குழந்தைகளுக்கு உணவை வீசினாரா ராணி எலிசபெத்? வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை என்ன?

சில தவறான வீடியோக்கள், உண்மைப்போலவே பரப்பப்பட்டு பேசுபொருளாகின்றன. அந்த வகையில் பிரிட்டன் ராணி எலிசபெத் குறித்த போலியான வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மறைந்த பிரிட்டன் ராணி இரண்டான் எலிசெபத் குழந்தைகளுக்கு உணவை வீசி எறிவதாக வீடியோ ஒன்று பகிரப்பட்டு வந்த நிலையில், அதில் இருப்பது அவரில்லை என்பதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உண்மை கண்டறியும் சோதனை மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. அந்த வீடியோ இரண்டாம் எலிசபெத் பிறப்பதற்கு பிறப்பதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
121 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோ சீனாவின் அன்னம் ( ANNAM) நகரில் பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மக்களுக்கு நாணயங்களை வீசும் காட்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணி எலிசபெத் மறைந்த பிறகு அவர் குறித்து தவறான வீடியோவை பரப்பும் சமூக வலைதளங்களை முடக்க சர்வதேச அளவில் கோரிக்கை எழுந்துள்ளது.