Published : 09,Sep 2022 11:18 AM

3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் வெளியாகும் ‘சூர்யா 42’ -மிரட்டலாக வெளியான மோஷன் போஸ்டர்

Suriya-42-motion-Poster-released-today

நடிகர் சூர்யாவின் ‘சூர்யா 42’ படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்று வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா, இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா படத்தில் நடிக்கவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்றது. தொடர்ந்து கோவாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. ‘சூர்யா 42’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று காலை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மிரட்டலான சிஜியில், அதிரடி பின்னணி இசையில் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. வாரியர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையக்கிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். மதன் கார்க்கி வசனங்களை எழுதுகிறார். நிசாத் யூசூப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் படத்தை 10 மொழிகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்