Published : 09,Sep 2022 07:56 AM

'இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே' - பெண்களின் உள்ளாடைகளைத் திருடும் நபருக்கு போலீஸ் வலை!

MP-man-stealing-women-underwear-in-Gwalior-caught-in-the-act

வீடுகளுக்குள் புகுந்து பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடும் வினோத திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து, பெண்களின் உள்ளாடைகள் திருடப்படும் சம்பவம் நடந்துள்ளது. இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் ஒரு ஆண் அங்கே கயிறுகள், கம்பிகளில் தொங்கவிடப்பட்டிருக்கும் பெண்களின் உள்ளாடைகளை  திருடிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

image

இது தொடர்பாக ஒரு பெண் கொடுத்த புகாரின்படி, கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதைத் தொடர்ந்து தங்களுடைய வீடுகளிலும் இதுபோன்று உள்ளாடைகள் திருடப்பட்டுள்ளதாக பல பெண்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

பெண்களின் உள்ளாடைகளை திருடும் அந்த நபரின் நோக்கம் என்னவென்பதை போலீசார் விசாரித்ததில், சில வீடுகளில் உள்ளாடைகளுடன் கொஞ்சம் பணமும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அடையாளம் தெரியாத அந்த நபர் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர். உள்ளாடைத் திருடனை கையும் களவுமாக பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதையும் படிக்க: வேலியே பயிரை மேய்ந்த அவலம்! பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய காவலர் கைது!
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்