Published : 06,Sep 2022 09:37 PM

ரோகித்தின் அதிரடியை வீணடித்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்! வெற்றியை ருசிக்குமா இந்திய அணி?

india-vs-srilanka

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்து இந்திய அணியை பேட்டிங்க் செய்ய அழைத்தது இலங்கை அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா போட்டிய தொடங்கிய நிலையில் 11 ரன்களில் இந்தியா தனது முதல் விக்கெட்டை இழந்தது. 6 ரன்களில் தீக்சனா வீசிய பந்தில் லெக்பை விக்கெட்டில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார் ராகுல். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.  

image

13 ரன்களில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்த போது, ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாடி அரைசதம் விளாசினார். அவருக்கு சூர்ய குமார் யாதவ் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். சிக்ஸர்களை விளாசித் தள்ளிய ரோகித் 72 ரன்களில் ஆட்டமிழந்தார். 

image

நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்ய குமாரும் 34 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த அதிரடி ஆட்டக்காரர்களாக ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் இருவரும் தலா 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹூடாவும் 3 ரன்னில் நடையைக் கட்டினார்.  இதனால், 200 ரன்கள் எட்டுவதற்காக வாய்ப்பு இருந்தும் இந்திய அணி கோட்டைவிட்டது. 

image

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 7 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் தில்ஷன் மதுஷங்கா 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். கருணரத்னே 27 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்