[X] Close

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்: தாயார் அற்புதம்மாள் கோரிக்கை

His-mother-requested-by-the-Tamil-Nadu-government-for-parole

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை மேலும் ஒரு மாதம் நீடிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார். 


Advertisement

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் ஒரு மாத பரோலில் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்கு பின்னர் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்த பேரறிவாளனை பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும், நண்பர்களும், உறவினர்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். பேரறிவாளனின் ஒருமாத பரோல் வரும் செப்டம்பர் 24-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அவரது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி முதலமைச்சர் பழனிசாமிக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கடிதம் எழுதியுள்ளார். 

பேரறிவாளன் பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருவதாகவும், அவரது தந்தையும், சகோதரியும் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உடல்ரீதியாக பலவீனப்பட்டு உள்ளதாகவும் கடிதத்தில் அற்புதம்மாள் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சூழ்நிலையில், பேரறிவாளன் மகன் என்ற முறையிலும், சகோதரன் என்ற முறையிலும் உடன் இருந்தால் குடும்பத்தினருக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.  


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close