Published : 06,Sep 2022 08:47 AM

ஆசியக் கோப்பை: இக்கட்டான கட்டத்தில் இந்திய அணி - இலங்கையுடன் இன்று மோதல்

Asia-Cup-Cricket--India-vs-Srilanka-match-today

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

ஆசியக் கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. இதன் காரணமாக, இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைக்க, வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இன்று இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

image

காயம் காரணமாக ஜடேஜா விலகியது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் இந்திய அணி வலுவாக இருந்தாலும் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

இரு அணியினரும் இலக்கை துரத்தவே முடிவு செய்வர் என்பதால் இப்போட்டியில் டாஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்