சாலையில் நடந்து சென்ற ரவுடி வெட்டிக் கொலை – மனைவியின் கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்

சாலையில் நடந்து சென்ற ரவுடி வெட்டிக் கொலை – மனைவியின் கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்
சாலையில் நடந்து சென்ற ரவுடி வெட்டிக் கொலை – மனைவியின் கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்

திருவான்மியூரில் மனைவி கண் முன்னே ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே ரவுடி ஓலை சரவணன் (35), என்பவர் தனது மனைவியோடு காவல் குடியிருப்பு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் ஓலை சரவணனை வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர்.

இது குறித்து ஓலை சரவணனின் மனைவி திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். ஓலை சரவணன் சமீபத்தில் தான் வழக்கு ஒன்றில் சிறை சென்று வெளியில் வந்துள்ளார். அவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com