Published : 05,Sep 2022 12:01 PM
டோல்கேட்டை உடைத்து பாய்ந்த டிராக்டர்கள் - வைரல் வீடியோ

உத்தரப் பிரதேசத்தில் மணல் கடத்தல் டிராக்டர்கள் சுங்கச்சாவடியை உடைத்துக் கொண்டு துணிகரமாக சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.
ஆக்ராவில் டிராக்டர் ஒன்று சுங்கச்சாவடி தடுப்புக் கம்பியை உடைத்துக் கொண்டு சென்றது. இதனைத்தொடர்ந்து சுமார் 50 விநாடிக்குள் அடுத்தடுத்து 13 டிராக்டர்கள் சுங்கச்சாவடியை கடந்து அதிவேகமாக சென்றன. அப்போது டிராக்டரில் சென்றவர்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குவதற்கு முற்பட்டனர். விசாரணையில், அவர்கள் உள்ளூர் மணல் கடத்தல் கும்பல் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அம்மாநில காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க: பழங்குடி சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு -பாலியல் வன்கொடுமை செய்து கொலை?