Published : 03,Sep 2022 07:34 AM
தேனி: அரசு பேருந்தின் மேற்கூரையில் ஓட்டை – மழையில் நனைந்தபடி சென்ற பயணிகள்

மழை பெய்யும் நேரத்தில் அரசு பேருந்தில் ஓட்டுநர் மற்றும் பயணிகள் மழையில் நனைந்தவாறு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டம் போடி அரசு போக்குவரத்து பணிமனையின் கட்டுப்பாட்டில் போடியில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் அரசு பேருந்தின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்திருந்தது. இதனால் மழை பெய்யும் நேரத்தில் பேருந்தை இயக்கிய போது ஓட்டுநர் மற்றும் பயணிகள் அனைவரும் மழை நீரில் நனைந்துபடி பயணம் சென்றுள்ளனர்.
இந்த காட்சியை செல்போன் மூலம் படம்பிடித்த சக பயணி ஒருவர் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.