Published : 02,Sep 2022 10:11 PM

‘இதுல கதையே கிடையாது..ஏன்னா இது..’ - சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ ட்ரெய்லர் வெளியீடு

Silambarasan-s-Vendhu-Thanindhathu-Kaadu-Official-Trailer-released

நடிகர் சிம்பு - இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

‘மாநாடு’ வெற்றிப் படத்திற்கு நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ளப் படம் ‘வெந்து தணிந்தது காடு’. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - நடிகர் சிம்பு - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி 3-வது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஜெயமோகன் எழுதிய ‘அக்னி குஞ்சொன்று கண்டேன்’ கதையை தழுவி எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் காரைக்குடி, சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்றது. ஐசுரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில், இலங்கையைச் சேர்ந்த நடிகை சித்தி இதானி கதாநாயகியாக நடித்துள்ளார். மூத்த நடிகையான ராதிகா, சிம்புவிற்கு அம்மாவாக நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற 15-ம் தேதி வெளியாகிறது.

image

இதையடுத்து படத்திற்காக புரமோஷன் பணிகள் துவங்கியுள்ளது. அந்த வகையில், படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு மிகப் பிரம்மாண்டாக வேல்ஸ் பல்கலைக்கழக வாளகத்தில் இன்று மாலை துவங்கியது. நடிகர் சிம்பு, கமல் ஆகியோர் ஹெலிகாப்டரில் மாஸாக வந்து இறங்கினர். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டைத் தொடர்ந்து, ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் படத்தில் இடம்பிடித்துள்ளன. இது உண்மையான மனுஷனோட வாழ்க்கை எனும் துவங்கும் இந்த ட்ரெயிலர் மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்