மாணவி பாலியல் பலாத்காரம் - ஆசிரியரை தேடுகிறது போலீஸ்

மாணவி பாலியல் பலாத்காரம் - ஆசிரியரை தேடுகிறது போலீஸ்
மாணவி பாலியல் பலாத்காரம் - ஆசிரியரை தேடுகிறது போலீஸ்

பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரையும், கருகலைப்புக்கு உதவியாக இருந்த மருத்துவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வருகிறார் மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தனக்கு வயிறு வலிப்பதாகக் கூறியதை அடுத்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார் அவர் அம்மா. அங்கு திடீரென்று வந்த மாலதியின் ஆசிரியர் ஜகத் சிங் குஜார், நலம் விசாரித்திருக்கிறார். மாலதியின் அம்மா விஷயத்தைச் சொன்னதும், ’இந்த மருத்துவமனை வேண்டாம், வேறு மருத்துவமனைக்கு நானே அழைத்துச் செல்கிறேன்’ என்று கூறியுள்ளார் குஜார். மகள் மேல் உள்ள அக்கறையில் சொல்கிறார் என்று மாலதியின் அம்மாவும் அவர் சொன்ன மருத்துவமனைக்கு சென்றார். 

பரிசோதித்த டாக்டர், என்ன விஷயம் என்பதை சொல்லாமல், ‘மாலதிக்கு அடிவயிற்றில் பிரச்னை. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். விஷயம் தெரியாமலேயே சம்மதித்தார் மாலதியின் அம்மா. ஆபரேஷன் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு மாலதியின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து ஜெய்ப்பூரில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தனர். பிறகுதான் உண்மை வெளியே வந்திருக்கிறது. இதையடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. 

போலீசார் கூறும்போது, ‘பள்ளியின் இயக்குனர் ஜகதீஷ் யாதவும் ஆசிரியர் ஜகத் சிங் குஜாரும் ஸ்பெஷல் கிளாஸ் என்று கூறி மாணவியை அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை சில மாதங்களாக செய்து வந்துள்ளனர். வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டியதால் மாணவி யாரிடமும் சொல்லவில்லை. கர்ப்பமான விஷயத்தைக் கேள்விபட்டு மருத்துவமனைக்கு வந்த ஆசிரியர், தனக்கு வேண்டிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அபார்ஷன் செய்துள்ளனர். இது அதிர்ச்சியாக உள்ளது. குற்றவாளிகளையும் அந்த மருத்துவர்களையும் தேடி வருகிறோம்’ என்று கூறினர். 
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com