[X] Close

ஸ்ரீசாந்த் வழக்கு: பிசிசிஐ அப்பீல்!

BCCI-files-appeal-in-sreesanth-case

சூதாட்டப் புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடையை கேரள உயர்நீதிமன்றம் நீக்கியதை எதிர்த்து, இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அப்பீல் மனு தாக்கல் செய்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் தொடர்பாக ஸ்ரீசாந்த் உள்பட 36 பேர் மீது 2013-ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் 2015-ல் இந்த வழக்கில் இருந்து அனைவரையும் விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடையை நீக்க, இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது. இதையடுத்து தன் மீதான தடையை நீக்க கோரி, ஸ்ரீசாந்த் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கேரள நீதிமன்றம் அதை நீக்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close