கை, கால்களில் அடிக்கடி விறைப்பு, பிடிப்பு ஏற்படுகிறதா? அப்போ இந்த பிரச்னையா இருக்கலாம்!

கை, கால்களில் அடிக்கடி விறைப்பு, பிடிப்பு ஏற்படுகிறதா? அப்போ இந்த பிரச்னையா இருக்கலாம்!
கை, கால்களில் அடிக்கடி விறைப்பு, பிடிப்பு ஏற்படுகிறதா? அப்போ இந்த பிரச்னையா இருக்கலாம்!

மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற மனநலம் சார்ந்த பாதிப்புகள் ஒவ்வொருவருக்கும் அவர்களது பிரச்னைகளுக்கு ஏற்றவாறு மாறுபடும். அப்படி மனநலம் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் போது தலைவலி, தூக்கமின்மை, செரிமான பிரச்னை போன்ற உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடும்.

ஆனால் மனதளவிலான பதற்றம் உண்டாகும் போது உடலில் உள்ள தசைகளில் பிடிப்பு ஏற்படுவது எந்த அளவுக்கு பொதுவானதாக இருக்கிறது தெரியுமா? மனதளவிலான அழுத்தம் ஏற்படும் போது தசைகளில் பிடிப்பு ஏற்படுவது பதற்றம், மனக்கவலை என சொல்லக் கூடிய ஆன்சைட்டியின் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

அரிதாக தசை பிடிப்புகள் ஏற்படக் கூடியதாக இருந்தாலும் அதற்கு மன அழுத்தம் முக்கிய காரணியாக இருக்கிறது. பெரிதளவிலான பாதிப்பாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம். இப்படி இருக்கையில் தசை பிடிப்புகள் ஏற்பட வேறு என்ன மாதிரியான பொதுவான காரணங்கள் இருக்கும் என்பதை காணலாம்:

நீரிழப்பு:

அதிகபடியான தண்ணீர் குடிக்காமல் இருக்கும் போது நீரிழப்பு (Dehydration) ஏற்படுவதால் அப்போது தசைப்பிடிப்பு உண்டாக வாய்ப்புள்ளது. ஸ்ட்ரெஸாக இருக்கும் போதோ அல்லது அதிகளவில் வியர்த்துக் கொட்டும் போது உடனடியாக சிறுநீர் கழித்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டால் அப்போது தசைப்பிடிப்பு ஏற்படும். ஆகையால் அந்த மாதிரி சமயத்தில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தசை பதற்றம்:

ஆன்சைட்டி நிலை ஏற்படும் போதும் தசைகளில் ஒருவித பதற்றம் ஏற்படக் கூடும். இதனால் தசைப்பிடிப்பும் உண்டாகும். மேலும் மன அழுத்தம் காரணமாக சோர்வாக இருந்தாலும் தசைப்பிடிப்புகள் வரும்.

தசை விறைப்பு:

ஸ்ட்ரெஸ், ஆன்சைட்டி, டிப்ரஷன் நிலையில் இருக்கும் போது கை கால்களில் உள்ள தசைகளில் விறப்பு ஏற்படும். அழுத்தமோ, படபடப்போ வரும் போது ரத்த நாளங்களில் அதிகபடியான பாரம் உண்டாவதால் தசைகள் சுருளும் வாய்ப்புண்டு. இதுபோக விறைப்பு, சுருக்கமும் ஏற்படக் கூடும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com