Published : 01,Sep 2022 10:59 AM

Never Give up: 0 டூ 8 இலக்கத்துல எப்படி வருமானம் ஈட்டலாம்? - தொழில்முனைவோரின் நக்கல் பதிவு

start-up-ceo-tips-for-rapid-growth-from-zero-to-8-figures

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் உலகம் முழுவதுமே முடங்கிக் கிடந்த பொருளாதாரம் இப்போது வரையும் முட்டி மோதிக் கொண்டே இருக்கின்றது. இதில் பெரிய, சிறிய என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து வகையிலான நிறுவனங்களும் பெரியளவிலான பாதிப்பை அடைந்திருக்கின்றன. இதில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிலை இன்னும் மோசமானதாகவே இருந்து வருவது அவ்வப்போது வெளியாகும் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

இப்படி இருக்கையில் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த Laskie.com என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் செயல் அதிகாரியான Chris Bakke தனது linkedin பக்கத்தில் பதிவிட்டுள்ள போஸ்ட்தான் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

image

அதில் தன்னுடைய ஸ்டார்ட் அப் நிறுவனம் 12 மாதத்தில் எட்டு இலக்கத்தில் வருமானத்தை ஈட்டியுள்ளதாக பதிவிட்டிள்ளார். இதில் என்ன பொருளாதாரம் மங்கிப் போவதற்கு இருக்கிறது எனக் கேள்வி எழலாம். அதில்தான் விஷயமே இருக்கிறது.

அதாவது, “2021 ஆகஸ்ட் மாதம் கிடைத்த பூஜ்ஜிய டாலர் வருமானம் 2022 ஆகஸ்ட் மாதத்தில் $0 -ல் இருந்து $0.00000000 ஆக உயர்ந்திருக்கிறது. ஆகவே முயற்சியை எப்போதும் கைவிட்டு விடாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ் பெக்கியின் இந்த பதிவு பல்லாயிரக்கணக்கானோரை ஈர்த்துள்ளதோடு, பலரும் நிதர்சனத்தை குறிப்பிட்டுள்ளதாகவும் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்