Published : 31,Aug 2022 03:15 PM

"இதுபோன்ற மோசமான ஷாட்களை ஒருபோதும் கோலி விளையாடியதில்லை" - சேவாக் கருத்து!

-He-has-never-played-such-bad-shots---Sehwag-on-Virat-Kohli

இதுபோன்ற மோசமான ஷாட்களை ஒருபோதும் அவர் விளையாடியதில்லை என்று விராட் கோலியின் பேட்டிங்க் குறித்து முன்னாள் இந்திய வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

நடந்து வரும் ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிகொண்ட போட்டி கடந்த ஞாயிற்றுகிழமை யுஏஇ மைதானத்தில் நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் கடைசி வரைக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போனது. இறுதியில் 3 ஓவர்களுக்கு 32 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ஜடேஜா மற்றும் பாண்டியா இருவரும் அபாரமாக விளையாடினர். இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பாகிஸ்தான் பந்துவீச்சாளர் நவாஸ் வீசிய பந்தை சிக்சர்க்கு பறக்கவிட்டு போட்டியை முடித்து வைத்தார்.

image

கடந்த 2021 ஆம் ஆண்டு உலககோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடைந்த படுதோல்விக்கு பழி தீர்த்து கொண்டது இந்திய அணி.

இந்நிலையில் தொடர்ந்து ஃபார்ம் அவுட்டில் இருந்து வந்த விராட் கோலி இந்த போட்டியில் மீண்டும் பழைய ஃபார்முக்கு வருவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. நடந்து முடிந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தா விட்டாலும் இரண்டாவது பந்திலேயே ஒரு விக்கெட்டை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில் 35 ரன்கள் நிலைத்து நின்று ஆடி அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார் விராட் கோலி.

image

விராட் கோலியின் இந்த பேட்டிங்க் குறித்து பேசியிருக்கும் இந்திய முன்னாள் வீரர் விரேந்திர சேவாக், "அவர் 150 ரன்களைத் சேஸிங் செய்யும் போது ஒருபோதும் எளிதில் ஆட்டமிழந்துவிட மாட்டார். நிலைத்து நின்று ஆடுவார். மேலும் இதுபோன்ற மோசமான ஷாட்களை ஒருபோதும் அவர் இதற்கு முன் விளையாடியதில்லை” என்று கூறியுள்ளார்."

image

தொடர்ந்து நாம் கோலியிடம் இருந்து பார்த்து பழகிய பேட்டிங் இன்னும் வெளிப்படவில்லை. வரும் டி20 உலகக் கோப்பைக்குள் கோலி பழைய மனநிலைக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்