[X] Close

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்: அனல் பறக்குமா ஆட்டத்தில்?

England--Windies-begin-their-1st-ODI-today

வெஸ்ட் ‌இண்டீஸ்-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. 


Advertisement

வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், முதல் போட்டி இன்று நடக்கிறது. மான்செஸ்டர் நகரில் நடைபெறும் இந்தப்போட்டி இந்திய நேரப்படி மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய்க்கு பதிலாக தொடக்க வீரராக ஜானி பயர்ஸ்டோவ் களமிறங்குவார் என கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த தொடர் முக்கியமானது. இதில் நான்கு போட்டிகளில் வென்றால்தான் அந்த அணி, 2019-ல் நடக்கும் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். தற்போது, ஒருநாள் போட்டி தரவரிசையில் இலங்கை அணி 8வது இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 வது இடத்திலும் இருக்கிறது. இந்த மாதம் 30ம் தேதி நிலவரப்படி முதல் 8 இடங்களுக்குள் இருக்கும் அணிகள் மட்டுமே உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். இந்தப் போட்டி தொடரில் வெஸ்ட் இண்டீஸ் நான்கு ஆட்டங்களில் வெற்றி பெறாவிட்டால் அடுத்த ஆண்டு நடக்கும் தகுதி சுற்று போட்டியில் விளையாடி முதல் 2 இடங்களை பிடித்தால் மட்டுமே உலக கோப்பைக்கு தகுதி பெற முடியும். அதனால், உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் நோக்கில்  வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று தெரிகிறது.
 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close