தரையில் படுத்து உறங்கிய தோனி: வைரலாகும் ஃபோட்டோ!

தரையில் படுத்து உறங்கிய தோனி: வைரலாகும் ஃபோட்டோ!
தரையில் படுத்து உறங்கிய தோனி: வைரலாகும் ஃபோட்டோ!

சென்னை விமான நிலையத்தில் தரையில் படுத்துறங்கிய தோனியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

சென்னை தான் என் ஃபேவரைட் ஸ்பார்ட் என கூறியவர் தோனி. அவர் சென்னைக்கு வரும் போதெல்லாம் இரவில் பைக் எடுத்து கொண்டு ஊர் சுற்றுவது வாடிக்கை. அப்படி அவர் சென்னையை சுற்றிய படங்கள் இதற்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. அதைப் போலவே இப்பொழுது சென்னை விமான நிலைய தரையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி படுத்திருந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கூலிங்கிளாஸ் அணிந்தபடி தோனி படுத்திருக்க, அருகே சக வீரர்கள் அமர்ந்துள்ள புகைப்படம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர், விமான நிலையத்திலிருந்து வீரர்கள் கொல்கத்தா சென்றனர். அதையொட்டி இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com