Published : 30,Aug 2022 09:44 PM
என்னையே அட்டாக் பண்றீயா! தாக்க வந்த புலிய தெறிச்சு ஓட விட்ட காளை! - வீடியோ

தைரியம், துணிச்சல் என்பது எல்லோருக்குள்ளும் இருப்பது. சிறு உயிரினங்கள்கூட கொடூரமான பெரிய விலங்குகளை எதிர்த்து வெற்றிபெறுவதை அவ்வப்போது நாம் சமூக ஊடகங்களில் பார்ப்பதுண்டு. அப்படி ஒரு சம்பவத்தை அருமையான வாசகங்களுடன் பகிர்ந்திருக்கிறார் புவனேஸ்வரைச் சேர்ந்த ஐஎஃப்எஸ் அதிகாரி.
இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் புலி ஒன்று மெதுவாக பதுங்கி பதுங்கி சாலையில் வந்துகொண்டிருந்த காளையை தாக்க முற்படுகிறது. காளை சிறிதும் பயப்படாமல் துணிச்சலாக புலியை தாக்குவதுபோல் ஓடிச்சென்று காட்டுக்குள் துரத்துகிறது. பிறகு அங்கிருந்து புலி ஓடிவிடுகிறது. பின்னர் புலி மெதுவாக சாலைப்பகுதிக்கு வருகிறது. இதனை அந்தப் பகுதியில் சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
Courage is found in unlikely places…
— Susanta Nanda IFS (@susantananda3) August 30, 2022
Bull scares away the tiger. This is not the behaviour apex predator that we know. Pressure of human presence is perhaps having a huge role.
WA fwd pic.twitter.com/6A4kx39yVc
இதுகுறித்து சுஷாந்தா நந்தா, ‘’சாத்தியமில்லாத இடங்களில்கூட தைரியம் காணப்படும்... காளை புலியை விரட்டுகிறது. இது நமக்குத் தெரிந்த வேட்டையாடும் முறை அல்ல. இதில் மனிதன் கொடுக்கும் அழுத்தம் பெரும்பங்கை கொண்டுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார். காளையின் தைரியம் குறித்தும், மனிதர்களின் பங்கு குறித்தும் பலரும் பாசிட்டிவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.