Published : 18,Sep 2017 03:53 PM

கனமழை எதிரொலி: நீலகிரியில் தயார் நிலையில் மீட்புக்குழு

Nilgiris-District-collector-rain

நீலகிரியில் மழை தீவிரமடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டத்தின் பந்தலூர், கூடலூர் தாலுகாவில் அண்மைக் காலமாக பெய்து வரும் மழையின் அளவு கணிமாக அதிகரித்துள்ளது. உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், போக்குவரத்தும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் மற்றும் இடர்பாடுகள் ஏற்பட்டால், உடனுக்குடன் சரி செய்யும் வகையில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். அத்துடன் அவசர உதவிக்கு 24 மணி நேரமும் செயல்படும் 1077 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். இவற்றுடன் மாவட்டம் முழுவதும் அபாயகரமான நிலையிலுள்ள மரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை அகற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்