Published : 18,Sep 2017 03:33 PM

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Admk-thanjai-celebrate

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தஞ்சையில் முதலமைச்சர் அணியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். தகுதி நீக்கம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் அணியினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையே எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் மற்ற எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தஞ்சை ரயில் நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர் சிலை முன் கூடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ஆதரவாக பட்டாசு வெடித்து கொண்டாடினர். அத்துடன் சாலையில் சென்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அதிமுகவிற்கு எதிராக செயல்பட்டதாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்