ரூ.640 கோடி மதிப்பில் கடற்கரை வில்லா.! விலைக்கு வாங்கியிருக்கும் அம்பானி

ரூ.640 கோடி மதிப்பில் கடற்கரை வில்லா.! விலைக்கு வாங்கியிருக்கும் அம்பானி
ரூ.640 கோடி மதிப்பில் கடற்கரை வில்லா.! விலைக்கு வாங்கியிருக்கும் அம்பானி

ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் துபாயில் 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடற்கரையோர வில்லாவை வாங்கியுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

பாம் ஜுமேராவில் உள்ள இந்த மாளிகை துபாயின் மிகப்பெரிய குடியிருப்பு சொத்தாகும். அம்பானியின் இளைய மகன் ஆனந்துக்காக வாங்கியதாகக் கூறப்படும் இந்த வில்லாவில் 10 படுக்கையறைகள், ஒரு தனியார் ஸ்பா மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற குளங்கள் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

பெரும் பணக்காரர்களுக்கு பிடித்த சந்தையாக துபாய் உருவாகி வருகிறது. அந்நாட்டு அரசாங்கம் நீண்ட கால "தங்க விசாக்களை" வழங்குவதன் மூலமும், வெளிநாட்டினருக்கு வீட்டு உரிமையின் மீதான தடைகளை தளர்த்துவதன் மூலமும் பணக்காரர்களின் சந்தைப்படுத்துதலை ஊக்கப்படுத்தியுள்ளது.

ஆடம்பர உயர்ந்த கட்டட வீடுகளுக்கு மேல் அதிகமாக, பாம் ஜுமைராவின் தீவுகளில் ஆடம்பரமான ஹோட்டல்கள், பளபளப்பான கிளப்புகள், ஸ்பாக்கள், உணவகங்கள் மற்றும் பாரசீக வளைகுடாவில் நீல நீரின் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளுடன் தெறிக்கும் அடுக்குமாடி கோபுரங்கள் என பணக்காரர்களை கவரும் விதமாக நிறைய உருவாக்கப்பட்டுள்ளன.

அதன் மொத்த கட்டுமானமும் 2001ல் தொடங்கியது. பின்னர் கட்டுமானம் முடிவடைந்த நிலையில் 2007ஆம் ஆண்டு முதல் குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்தனர். UAEன் மக்கள்தொகையில் சுமார் 80% க்கும் அதிகமாக வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் உள்ளனர். இதனால் அந்நாட்டிற்கு பல்லாண்டுகளாக பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளனர்.

இந்நிலையில் உலகின் 11ஆவது பெரிய பணக்காரரும் மற்றும் ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராகவும் இருக்கும் முகேஷ் அம்பானி நிறுவனம் தற்போது 80 மில்லியன் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 640 கோடி ரூபாய் அவர்களது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்காக பாம் ஜுமேராவில் உள்ள விலையுயர்ந்த கடற்கரை மாளிகையை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு, இங்கிலாந்தில் உள்ள ஸ்டோக் பூங்காவை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் 79 மில்லியன் டாலர்களை செலவிட்டது. மேலும் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட மூத்த மகன் ஆகாஷுக்கு ஜார்ஜிய காலத்து மாளிகை உள்ளது. மேலும் அவரது இரட்டை சகோதரி இஷா, நியூயார்க்கில் ஒரு விலை உயர்ந்த வீட்டை விலைக்கு வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விலையுயர்ந்த வீடுகளும் வில்லாக்களும் வாங்கப்பட்டாலும் அம்பானிகளின் முதன்மை இல்லம் ஆண்டிலியாவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இது மூன்று ஹெலிபேடுகளுடன் மும்பையில் 27 மாடிகளைக் கொண்ட வானளாவிய கட்டிடமாகும். இதில் 168 கார்கள் நிறுத்துமிடம், 50 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், ஒரு பெரிய பால்ரூம் மற்றும் ஒன்பது லிஃப்ட் உள்ளது.

மேலும் MI உரிமையாளர்கள் சமீபத்தில் எமிரேட்ஸ் கிரிக்கெட் சர்வதேச T20 லீக்கில் (ILT20) ஒரு அணியை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com