Published : 26,Aug 2022 10:32 PM
‘அப்படியே காலில் விழுந்துடுவோம்’ - ஓட்டுக்காக படுத்தேவிட்ட மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ

ராஜஸ்தானில் கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் மாணவர்கள், மாணவிகளின் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் பாரன், பாரத்பூர் மாவட்ங்களில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக மாணவர் சங்க தேர்தல் நiடபெறவில்லை. தற்போது கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அம்மாநிலத்தில் கல்லூரி, பல்கலைகழகங்களில் மாணவர் சங்க தேர்தல் நடத்த நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலையொட்டி பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடும் மாணவர்கள் ஓட்டுப்போட வந்த மாணவிகளின் காலில் சாஷ்டங்கமாகவும், உருண்ட வகையிலும் விழுந்து ஓட்டு கேட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திடீரென மாணவர்கள் விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் பின்பு சிரித்துக்கொண்டே நழுவித் சென்றனர். இன்று ஓட்டுப்பதிவு நிறைவடைந்துள்ளநிலையில், நாளை காலை ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. மாலையில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
In Bharatpur Rajasthan, leader in the making. Students leader putting all his effort to be a student leader#Bharatpur#Rajasthanpic.twitter.com/XjNftQkTIQ
— Vinay Kumar (@vinatanycost) August 26, 2022