Published : 25,Aug 2022 09:24 PM
கொல்ல வந்த பயங்கரவாதிக்கு ரத்தம் கொடுத்த இந்திய ராணுவம்.. விசாரணையில் பகீர் வாக்குமூலம்!

இந்திய ராணுவத்தை தாக்குவதற்காக, பாகிஸ்தான் உளவுத்துறை 30 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக, பிடிபட்ட பயங்கரவாதி வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி பகுதியில் கடந்த 21 ஆம் தேதி நடந்த என்கவுன்டரின் போது பிடிபட்ட தபாரக் ஹுசைன் என்ற பயங்கரவாதி மூலம், பாகிஸ்தான் உளவுத்துறையின் தாக்குதல்கள் அம்பலமாகியுள்ளன. காயமடைந்த தபாரக் ஹுசைனுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பயங்கரவாதிக்கு ரத்த தானம் செய்து இந்திய ராணுவத்தினர் உதவியுள்ளனர்.
மருத்துவமனையில் உள்ள அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உளவுத்துறையை சேர்ந்த கர்னல் யூனுஸ் சௌத்ரி என்பவர் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து தன்னை பணி அமர்த்தியதாக கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் தபாரக், கடந்த 6 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக, எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற போது கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.