
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற 256 ரன்களை இலக்காக தமிழக அணி நிர்ணயித்துள்ளது.
ராஜ்கோட்டில் மும்பை-தமிழக அணிகளுக்கான அரையிறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய தமிழக அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்கள் எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 411 ரன்கள் எடுத்தது. இதனால் தமிழக அணியை விட மும்பை அணி 106 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய தமிழக அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தமிழக ஆணி சார்பாக கேப்டன் அபினவ் முகுந்த், இந்திரஜித் ஆகியோர் சதம் அடித்து ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய அபினவ் முகுந்த் 122 ரன்களுடனும், இந்திரஜித் 138 ரன்களுடனும் பெவிலியன் திரும்பினர். தமிழக அணி 6 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தை டிக்ளர் செய்தது. இதன்மூலம் மும்பை அணி வெற்றி பெற 251 ரன்களை இலக்காக தமிழக அணி நிர்ணயித்துள்ளது.
பின்னர் ஆட்டத்தை தொடங்கிய மும்பை அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது.