Published : 25,Aug 2022 09:16 AM

வரப்போகுது 5ஜி! ரூ.30 ஆயிரம் விலைக்குள் இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த 5ஜி மொபைல்கள் இதோ

Best-5G-phones-under-Rs-30-000-you-can-buy-in-India-right-now

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிவுற்ற நிலையில் வெகு விரைவில் நாட்டின் முக்கிய நகரங்களில் முதற்கட்டமாக 5ஜி சேவை அறிமுகமாக உள்ளது. அறிமுகமான பின் இந்த சேவையை பெறுவதற்கு உங்களிடன் 5ஜி வசதி பெற்ற ஸ்மார்ட்ஃபோன் இருக்க வேண்டும். இந்தியாவிலேயே 5ஜி வசதி கொண்ட பல ஸ்மார்ட்போன்கள் தற்போது விற்பனையில் இருக்கின்றன. அவற்றில் ரூ.30 ஆயிரம் விலைக்குள் பல சிறப்பம்சங்களுடன் இருக்கும் சிறந்த 5ஜி மொபைல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

India to Start Rolling out 5G Services in September: Report | Beebom

போகோ எஃப்4 5ஜி (Poco F4 5G):

Poco F4 5G ஆனது பத்து 5ஜி பேண்டுகளை ஆதரிக்கிறது. ஸ்னாப்டிராகன் 870 பிராசஸரை அடிப்படையாக கொண்டது இந்த மொபைல். இது கேமிங் மற்றும் பல செயலிகளை ஒருங்கே கையாள்வதில் மிகவும் திறமையான பிராசஸர் என்று கூறப்படுகிறது. மிகவும் நேர்த்தியான வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் AMOLED டிஸ்ப்ளே டால்பி விஷனை ஆதரிக்கிறது.

Poco F4

67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4500 mAh பேட்டரி வசதி இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மற்ற சிறப்பம்சங்களில் புளூடூத் 5.2 மற்றும் Poco க்கான ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 ஆகியவை அடங்கும். 4K தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் அற்புதமான கேமராக்களும் இந்த மொபைலுக்கு தனிச்சிறப்பு. இந்தியாவில் Poco F4 5G மொபைலின் விலை ரூ.29,999 ஆகும்.

மோட்டோரோலா எட்ஜ் 30 (Motorola Edge 30):

5ஜி மொபைல் வாங்குவது என்று முடிவு செய்தபின் உங்களுக்கு மொபைலின் பெர்பாமன்ஸும் முக்கியம் என்றால் நீங்கள் மோட்டோரோலா எட்ஜ் 30-ஐ முயற்சித்துப் பார்க்கலாம். இது 144Hz புதுப்பிப்பு விகிதத்துடன் ஒரு தனித்துவமான pOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அட்டகாசமாக ஆண்ட்ராய்டு 12 அனுபவத்தையும் இந்த மொபைல் வழங்குகிறது.

Motorola Edge 30 launched: price, specifications, availability

மோட்டோரோலா எட்ஜ் 30 13 5G பேண்டுகளை ஆதரிக்கிறது. இது 778G+ 5G இலிருந்து ஆற்றலைப் பெறுகிறது. இந்த அம்சம் தடுமாற்றம் இல்லாமல் தினசரி பணிகளை மேற்கொள்ள உதவும். செல்ஃபி கேமராவின் மெகா பிக்சல் மிகவும் குறைவாக இருந்தாலும், OIS உடன் செயல்படும் அதன் பின்புற கேமரா நல்ல செயல்திறனை வழங்குகிறது. இது 33W சார்ஜிங்குடன் 4020mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 30 விலை ரூ.29,999 ஆகும்.

Motorola Edge 30 Review with Pros and Cons | Smartprix

விவோ வி23 (Vivo V23):

5ஜி மொபைல் வாங்குவது என்று முடிவு செய்தபின் உங்கள் முன்னுரிமை செல்ஃபி கேமராக்கள் என்றால், Vivo V23 மொபைலை நீங்கள் கருத்தில் கொள்ளலான். முன் நாட்ச்சில் 50 மெகாபிக்சல் பிரதான சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவை அடங்கும். நேர்த்தியான வடிவமைப்பைப் பெற்றுள்ள இந்த மொபைல் 90Hz AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது ஒரு நல்ல பார்வை அனுபவத்தை வழங்குகிறது. இருப்பினும் இந்த பிரிவில் உள்ள மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது சற்று பின் தங்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4200 mAh பேட்டரி வசதி இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் Vivo V23 விலை ரூ 29,990 ஆகும்.

vivo V23 review: Design, build quality, controls

ஐகூ நியோ 6 5ஜி (iQoo Neo 6 5G):

நீங்கள் கேமிங்கை மையமாகக் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், iQoo Neo 6 5G என்பது கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விருப்பமாகும். இந்த மொபைலின் சிறப்பம்சங்கள் சிறிய வேறுபாடுகளுடன் இருந்தாலும், பலவற்றில் Poco F4 5G மொபைலை ஒத்திருக்கிறது. உதாரணமாக, அதன் 120Hz டிஸ்ப்ளே டால்பி விஷன் ஆதரவைப் பெறவில்லை. ஆனால் இது வேகமான 80W சார்ஜிங் ஆதரவுடன் 4700mAh பேட்டரியுடன் வருகிறது. இது நான்கு 5G பேண்டுகளுக்கான ஆதரவைப் பெறுகிறது. இந்தியாவில் iQoo Neo 6 5G விலை ரூ 29,999 ஆகும்.

iQOO Neo 6 5G (Dark Nova, 12GB RAM, 256GB Storage) | Snapdragon® 870 5G |  80W FlashCharge : Amazon.in: Electronics

ஒன்பிளஸ் நார்ட் 2டி 5ஜி (OnePlus Nord 2T 5G):

பட்டியலில் கடைசியாக OnePlus Nord 2T 5G உள்ளது. வடிவமைப்பின் அடிப்படையில் நன்றாக இருக்கிறது இந்த மொபைல். ஒரு நல்ல கேமரா அமைப்பையும் இது வழங்குகிறது. மேலும் இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தையும் ஆதரிக்கிறது. இது ஏழு 5G பேண்ட் ஆதரவைப் பெறுகிறது. நீங்கள் ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முக்கிய கேரியர்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இதுவும் நல்ல மொபைல்தான். இந்தியாவில் OnePlus Nord 2T 5G விலை ரூ 28,999 ஆகும்.

OnePlus Nord 2 5G Review: Just Call It the OnePlus 9 Lite | Digital Trends

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்