[X] Close

ஆட்டத்தைக் கடுமையாக்கிய தோனி, பாண்ட்யா: ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்

Dhoni--Pandya-Captain-Steve-Smith

இந்திய அணி வீரர்கள் தோனியும், பாண்ட்யாவும் நிலைத்து ஆடி போட்டியை கடுமையாக்கிவிட்டார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியாவுக்கு சவால் விடுத்துள்ள ஆஸ்திரேலிய அணிக் கேப்டன் ஸ்மித், தங்கள் அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.

மழையின் காரணமாக தாங்கள் வெற்றி பெற இயலவில்லை என்றும், நிதானமாக விளையாடியிருந்தால் இலக்கை எட்டியிருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தோனி மற்றும் பாண்டியாவின் ஆட்டத்தினால் தங்கள் இலக்கு கடினமாகி விட்டதாகவும், அவர்கள் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்றும் ஸ்மித் பாராட்டியுள்ளார். அத்துடன் இந்தியாவின் பந்து வீச்சாளர்களும் சிறந்த முறையில் செயல்பட்டதால் தாங்கள் தோல்வி அடைந்துள்ளதாகவும், இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் இந்தியாவை வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close