கல்யாணத்தை நிறுத்த அமெரிக்க மாப்பிள்ளை போட்ட நாடகம்.. அம்பலமானது எப்படி?

கல்யாணத்தை நிறுத்த அமெரிக்க மாப்பிள்ளை போட்ட நாடகம்.. அம்பலமானது எப்படி?
கல்யாணத்தை நிறுத்த அமெரிக்க மாப்பிள்ளை போட்ட நாடகம்.. அம்பலமானது எப்படி?

தனக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்த மணமகன் போட்ட நாடகம் கடைசியில் அம்பலமானது பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தெலங்கானாவின் ஹனம்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் அன்வேஷ். இவர் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறார். அன்வேஷுக்கும், ஜக்தியல் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திருமணம் நடக்க இருந்தது.

திருமணத்துக்காக பெண் வீட்டில் இருந்து 25 லட்சம் வரதட்சணையும் கொடுப்பதாகவும், அதில் 15 லட்சத்தை நிச்சயதார்த்தத்தின் கொடுத்த பெண் வீட்டார், எஞ்சிய 10 லட்சத்தை திருமணத்தின் போது கொடுப்பதாகவும் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள்.

அதன்படியே அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று திருமணத்துக்கான சடங்குகளும் நடத்தப்பட்டிருக்கிறது. சரியாக கல்யாணம் நடக்கப்போகும் நேரமாக பார்த்து மணமகன் அன்வேஷ் உறவினர்களை அழைத்து தான் பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

இதனையடுத்து உடனடியாக ஜக்தியல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் தொடர்ந்து அவர் தனக்கு முடியவில்லை எனக் கூறியிருக்கிறார். இதனால் மற்றொரு மருத்துவரையும் பார்த்து எல்லா பரிசோதனையும் எடுக்கச் செய்திருக்கிறார்கள்.

அதில் மாப்பிள்ளைக்கு எந்த தொந்தரவும் இல்லை. அவர் நன்றாகவே இருக்கிறார் என முடிவு வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 5 மணிநேரமாக இந்த களேபரம் தொடர்ந்ததால் சந்தேகமடைந்த பெண் வீட்டாரை மாப்பிள்ளையிடம் கறார் காட்டியிருக்கிறார்கள்.

அதன்படி, ஏன் இப்படி செய்கிறீர்கள் என வற்புறுத்தி கேட்கவே மணமகன் நாடகமாடியது வெளிப்பட்டிருக்கிறது. இதனையறிந்த உறவினர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். பெண் வீட்டார் அன்வேஷையும் தாக்கவும் செய்திருக்கிறார்கள்.

இதனை தடுத்த உறவினர்கள் திருமணம் நடத்துவதா இல்லையா என்பது குறித்து பேச்சுவார்த்தை நீண்டிருக்கிறது. அதன்பின்னர் ஒருவழியாக கல்யாணம் வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் மணமகனின் இந்த நாடகம் எதற்காக அரங்கேற்றப்பட்டது என்ற தகவல் எதுவும் தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com