தனியார் பேருந்தின் படியில் அமர்ந்து மது அருந்தியவாறு பயணம் செய்த நபர்கள் - வைரல் வீடியோ

தனியார் பேருந்தின் படியில் அமர்ந்து மது அருந்தியவாறு பயணம் செய்த நபர்கள் - வைரல் வீடியோ
தனியார் பேருந்தின் படியில் அமர்ந்து மது அருந்தியவாறு பயணம் செய்த நபர்கள் - வைரல் வீடியோ

திருப்பூரில் தனியார் பேருந்தில் பயணத்தின் போது படியில் அமர்ந்து மது அருந்திச் செல்லும் குடிமகன்கள். சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து - அனுப்பர்பாளையம் வரை தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு TN 39 BD2626  என்ற பதிவெண் கொண்ட பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது படிக்கட்டில் அமர்ந்தவாறு நான்கு நபர்கள் மது அருந்திச் சென்றுள்ளனர். இதை காரில் சென்ற நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் எப்படி அனுமதித்தார்கள் என்றும் படியில் அமர்ந்து மது அருந்தும் 4 பேர் மட்டும் இன்றி பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com