‘சாக்லேட் பாயாக வருவேன்; ப்ளே பாயாக வரமாட்டேன்‘- அருள்நிதி பேச்சு

‘சாக்லேட் பாயாக வருவேன்; ப்ளே பாயாக வரமாட்டேன்‘- அருள்நிதி பேச்சு
‘சாக்லேட் பாயாக வருவேன்; ப்ளே பாயாக வரமாட்டேன்‘- அருள்நிதி பேச்சு

ப்ளே பாய் கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று மதுரையில் ‘டைரி’ திரைப்பட புரோமோஷன் நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் அருள்நிதி பேட்டியளித்துள்ளார்.

நடிகர் அருள்நிதி நடித்த ‘டைரி’ படத்தினை விளம்பரப்படுத்தும் விழா, மதுரையில் உள்ள திரையரங்குகளில் நடைபெற்றது. ‘டைரி’ திரைப்பட குழுவினர், ஒவ்வொரு திரையரங்கிற்கு சென்று திரைப்பட ட்ரைய்லரை வெளியீடு செய்து ரசிகர்கள் மத்தியில் பேசினர். இந்நிகழ்வில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகன் அருள்நிதி, பட விநியோகஸ்தர் குணா, கதாநாயகி, இயக்குநர் இன்னிசை பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் கலந்துரையாடினர். அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய அருள்நிதி ‘டிமாண்டி காலனி’ 2-ம் பாகம் தயாரிக்கப்பட உள்ளதை உறுதி செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அருள்நிதி, க்ரைம் திரில்லர் படத்தில் நடிப்பது வசதியாக உள்ளது, சாக்லேட் மன்னனாக நடிப்பேன். ஆனால் ப்ளே பாயாக நடிக்க மாட்டேன். காலத்திற்கு ஏற்ற புரமோஷன் தேவைப்படுகிறது. தவறான விதத்தில் வன்முறை காட்சிகள் இடம்பெறவில்லை. தவறு செய்பவர்களுக்கு எதிராகவே படத்தில் துப்பாக்கியை காட்டியுள்ளோம்” இவ்வாறு பேசினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com