Published : 23,Aug 2022 01:02 PM

ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு தொடக்கமே பின்னடைவு - ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா பாதிப்பு

Asia-Cup-2022-India-head-coach-Rahul-Dravid-tests-Covid-19-positive-ahead-of-team-departure

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் டி20 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஆகஸ்ட் 28 ஆம் தேதி, நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் இன்று துபாய் புறப்பட்டு செல்கின்றனர்.

image

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க துபாய் செல்லும் இந்திய அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் செல்ல மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டிராவிட் ஆன்லைன் வாயிலாக ஆலோசனைகள் வழங்குவார் எனக் கூறப்படுகிறது. டிராவிட்டுக்கு பதிலாக தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லட்சுமணன் இந்திய அணியினருடன் பயணிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: ஃபார்முக்கு திரும்புவாரா விராட் கோலி? -ரசிகரின் கேள்விக்கு அஃப்ரிடி கொடுத்த 'நச்' பதில்



சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்