நடிகர் விக்ரமை காண அலைமோதிய கூட்டம்... தள்ளுமுள்ளு காரணமாக ரசிகர்களுக்கு லத்தி சார்ஜ்!

நடிகர் விக்ரமை காண அலைமோதிய கூட்டம்... தள்ளுமுள்ளு காரணமாக ரசிகர்களுக்கு லத்தி சார்ஜ்!
நடிகர் விக்ரமை காண அலைமோதிய கூட்டம்... தள்ளுமுள்ளு காரணமாக ரசிகர்களுக்கு லத்தி சார்ஜ்!

திருச்சி விமான நிலையத்தில் நடிகர் விக்ரமை காண வந்த ரசிகர்களுக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் தள்ளுமுள்ளை ஏற்படுத்தியவர்கள் அடித்து விரட்டியடிக்கப்பட்டனர்.

நடிகர் விக்ரம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்னையிலிருந்து இன்று காலை வந்தார். தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகவும் கோப்ரா பட பிரமோஷன்காகவும் இன்று திருச்சி வந்த அவரை ஏராளமான ரசிகர்கள் வரவேற்க விமான நிலையத்தில் கூடியிருந்தனர். நடிகர் விக்ரம் திருச்சி விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் பொழுது பயணிகள் உள்ளே செல்லக்கூடிய பகுதிக்கு ரசிகர்கள் ஓடினர். அப்பொழுது அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும் ரசிகர்களுடைய தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ரசிகர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் லத்தியால் அடித்து விரட்டினர். சில ரசிகர்கள் கூட்டத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் காலால் மிதிக்கும் நிலையும் ஏற்பட்டது. அங்கிருந்த மோப்ப நாயும் அதிகமாக குரைத்ததால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் விக்ரமை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் அவருடன் வந்த பவுன்சர்கள் பத்திரமாக அழைத்து சென்று காரில் அமர வைத்தனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மதுரை செல்கிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com