Published : 06,Feb 2017 06:20 AM
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமா ஏற்பு

முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அதில், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை முதலமைச்சர் பதவியில் பன்னீர்செல்வம் தொடர வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோன்று, மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்வரை தற்போதைய அமைச்சரவை நீடிக்கவும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். இதனால், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு பன்னீர்செல்வம் நேற்று கடிதம் அனுப்பியிருந்தார்.