ரூ.3 கோடி செலவு; 6000 சீட்... மிக மிக பிரம்மாண்டமாய் தயாராகும் சிம்பு பட ஆடியோ லான்ச்

ரூ.3 கோடி செலவு; 6000 சீட்... மிக மிக பிரம்மாண்டமாய் தயாராகும் சிம்பு பட ஆடியோ லான்ச்
ரூ.3 கோடி செலவு; 6000 சீட்... மிக மிக பிரம்மாண்டமாய் தயாராகும் சிம்பு பட ஆடியோ லான்ச்

சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ லான்ச் மிக பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் - சிம்பு கூட்டணி மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

சிம்புவுடன் ஸித்தி இதானி, ராதிகா, நீரஜ் மாதவ் எனப் பலரும் தடித்துள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து வெளியீட்டுக்கான வேலைகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

வரும் செப்டம்பர் 2ம் தேதி இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் யுனிவர்சிட்டியில் நடைபெற உள்ளது. ரூ. 3 கோடிக்கும் மேலான பொருட்செலவில் இந்த நிகழ்வு நடக்க உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல் உட்பட பலருக்கும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 6000 பேர் கலந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. கோலிவுட் சினிமா வரலாற்றில் மிக பிரம்மாண்டமான முறையில் நடக்கும் ஆடியோ லான்ச் இதுவாக இருக்கும் என்கிறார்கள்.

- ஜான்சன்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com