Published : 22,Aug 2022 09:14 AM

சோர்வில் ஜிம்பாப்வே வீரர்கள்... ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் இந்தியா

3rd-and-final-ODI-between-India-and-Zimbabwe-will-be-played-in-today

தொடர் தோல்விகளால் ஜிம்பாப்வே அணியின் வீரர்கள் சோர்வடைந்துள்ளனர்.

ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹராரேவில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 12.45 மணிக்கு தொடங்குகிறது.

தொடர்ச்சியாக 3வது வெற்றியுடன் தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்புடன் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. தொடர்ந்து சொதப்பலாக ஆடிவரும் ஜிம்பாப்வே வீரர்கள் ஓரளவு கவுரவமாக தோற்க முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.  இன்றைய ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட், சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் அகமது, வேகப்பந்து வீச்சாளர் அவேஷ்கான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

image

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: சுப்மான் கில், ஷிகர் தவான் அல்லது ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், கே.எல்.ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அக்‌ஷர் பட்டேல் அல்லது ஷபாஸ் அகமது, ஷர்துல் தாக்குர் அல்லது தீபக் சாஹர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அல்லது அவேஷ்கான், குல்தீப் யாதவ்.

ஜிம்பாப்வே: தகுட்வனாஷி கைடானோ, இன்னசென்ட் கையா, ரெஜிஸ் சகப்வா (கேப்டன்), வெஸ்லி மாதேவிர் அல்லது டோனி முனியோங்கா, சிகந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ், ரையான் பர்ல், லூக் ஜாங்வி, பிராட் இவான்ஸ், விக்டர் யாச்சி, தனகா சிவாங்கா.

இதையும் படிக்கலாம்: ஒரு ரன்னில் ஆட்டமிழந்த கே.எல். ராகுல் - முகமது கைஃப் என்ன சொன்னார் தெரியுமா?



சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்