Published : 21,Aug 2022 07:29 PM

புரதச்சத்துக்கு எந்த சீஸ் வகை சிறந்தது?

How-to-improve-protein-intake-with-cheese-

சீஸ் உணவுகளுக்கு தற்போது தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சிலர் தங்கள் சாண்ட்விச்களின்மீது cheddar சீஸை தூவிவிட்டு சாப்பிட ஆசைப்படுவர். சிலர் பீட்சாவில் ரப்பர்போல் இழுத்து சாப்பிடும் மோசரெல்லா சீஸை விரும்பி சாப்பிடுவர். ஆனால் உடலுக்கு தேவையான புரதச்சத்தை சீஸ் மூலம் எடுத்துக்கொள்ள விரும்புவோர் கட்டாயம் முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நோய் கட்டுப்பாடு, எடை கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு புரதச்சத்து ஒரு சிறந்த மேக்ரோ ஊட்டச்சத்தாக அமைகிறது. அமினோ அமிலங்களிலிருந்து தயாரிக்கப்படுபவை மற்றும் புரதங்கள் பெரும்பாலும் வாழ்க்கையை கட்டமைக்கும் கற்களாகவே இருக்கின்றன. அதற்கு காட்டேஜ் சீஸ் அல்லது பனீர் சிறந்த புரதச்சத்தை வழங்கும்.

image

காட்டேஜ் சீஸிலுள்ள புரதம்

சீஸில் ஆரோக்கியமான கொழுப்பு, புரதங்கள், கால்சியம், அயோடின், பி வைட்டமின்கள் மற்றும் செலனியம் நிறைந்திருக்கின்றன. மற்றவகை சீஸ்களைவிட காட்டேஜ் சீஸில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. பரிமாறப்படும் அரை கப் பனீரில் 12 கிராம் புரதச்சத்து இருக்கிறது. 2000 கலோரி டயட்டில் 50 கிராம் பனீர் தினசரி எடுத்துக்கொண்டாலே ஒருநாளைக்கு தேவையான புரதச்சத்து கிடைத்துவிடும்.

image

பனீர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

அடிக்கடி காட்டேஜ் சீஸ் சாப்பிடுவது பல நன்மைகளைப் பெறுவதற்கான சிறந்த வழி. முதலில் உடல் எடையை குறைக்க பனீர் உதவுகிறது. இந்த சீஸிலுள்ள புரதங்கள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும், பசியை தூண்டாது மற்றும் அதிக கலோரிகளை எளிதில் எரிக்க உதவுதன்மூலம் எடையை எளிதில் குறைக்க முடியும். அதிக புரதம் நிறைந்த பால் பொருட்களை சாப்பிடுவது மெனோபாஸ் காலங்களிலும், அதிக எடையுள்ள பெண்கள் எடையை குறைத்து தசைவலிமையை அதிகரிக்கவும் உதவும் என்று கூறியிருக்கிறது Nutrients இதழில் வெளியான ஓர் ஆய்வு. இதற்கு பனீர் ஒரு சிறந்த வழி.

காட்டேஜ் சீஸை டயட்டில் எடுத்துக்கொள்வது எளிது. சாண்ட்விச்சில் தூவி சாப்பிடலாம். அல்லது க்ரில் செய்து உப்பு, மிளகு சேர்த்து சாலட்டாகக்கூட காலை உணவில் சாப்பிடலாம்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்