Published : 20,Aug 2022 07:02 AM

இன்று 2-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்தியா?

Today-is-the-2nd-ODI-between-India-and-Zimbabwe

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில், 2வது போட்டி ஹராரேயில் இன்று (சனிக்கிழமை) இந்திய நேரப்படி பிற்பகல் 12.45 மணிக்கு நடைபெறுகிறது.

கடைசியாக மோதிய 13 போட்டிகளிலும் இந்தியா வென்று, ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு தங்களது ஆதிக்கத்தை தொடருவதுடன், தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியினர் இருக்கிறார்கள். சொந்த மண்ணில் முந்தைய ஆட்டத்தில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு வர ஜிம்பாப்வே  அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே தொடரை வெல்ல இந்தியாவும், பதிலடி கொடுக்க ஜிம்பாப்வே அணியும் வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டத்தில் சூடுபறக்கும் என எதிர்பார்க்கலாம்.

image

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: ஷிகர் தவான், சுப்மான் கில், இஷான் கிஷன், கே.எல்.ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அக்ஷர் பட்டேல், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

ஜிம்பாப்வே: இன்னசென்ட் கையா, மருமானி, வெஸ்லி மாதேவிர், சீன் வில்லியம்ஸ், சிகந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா (கேப்டன்), ரையான் பர்ல், லூக் ஜாங்வி, பிராட் இவான்ஸ், ரிச்சர்ட் கராவா, விக்டர் யாச்சி.

இதையும் படிக்க: '2023 உலகக் கோப்பையில் இந்த வீரர் முக்கியமானவராக இருப்பார்' - சபா கரீம்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்