Published : 18,Aug 2022 05:58 PM

”சச்சின் டெஸ்ட்டில் ஓய்வு பெற்ற பிறகு, இனி ரோகித் தான் என நினைத்தோம்.. ஆனால்”-கார்த்திக்

-After-Sachin-retired-in-Tests--we-thought-it-was-Rohit---But--Karthik

இந்திய நட்சத்திர வீரர் ரோகித் சர்மாவின் டெஸ்ட் கரியரை பற்றி பேசியிருக்கும் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இனி அதற்கு பதிலாக ரோகித் சர்மா தான் இருப்பார் என்று நினைத்தோம் ஆனால் நடந்தது வேறு என்று தெரிவித்திருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது கடைசி டெஸ்ட் போட்டியை, வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கொல்கத்தாவில் ஆடினார்.

அந்த டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் அடித்த நிலையில், இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிக பிரமாண்டமான வீரரின் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்தது.

image

இந்நிலையில் இந்தியாவின் இன்னொரு பிரமாண்ட வீரரின் டெஸ்ட் கிரிக்கெட் பயணம் அப்போது தான் தொடங்க இருந்தது. அந்த வீரர் வேறு யாரும் இல்லை ரோகித் சர்மா தான். அறிமுகமான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்தார் ரோகித் சர்மா. முதல் டெஸ்ட் போட்டியில் 177 ரன்கள் அடித்த அவர் இந்திய பேட்ஸ்மேன்களில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் அடித்த 14 ஆவது இந்திய வீரரானார். மற்றும் இரண்டாவது போட்டியில் 111 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார்.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அப்படி விளையாடுவது எல்லாம் பெரிய விசயம் என்று தெரிவித்த தினேஷ் கார்த்திக், இதற்கு பிறகு இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் இல்லாத கேள்விக்கு ரோகித் சர்மா தான் பதிலாக இருப்பார் என்று நினைத்தோம் என்றார்.

image

”ஆனால் வாழ்க்கையும் விளையாட்டும் நீங்கள் நினைப்பது போல் இருக்காது. ரோகித்தின் டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் பல வளைவான பந்துகள் வீசப்பட்டன” என்று டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் தாமதமான உயர்வு குறித்து தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்