Published : 18,Aug 2022 05:32 PM

கஞ்சா போதையில் கழுத்தை அறுத்து தற்கொலை.. கடன் தொல்லையில் ஆசிரியையின் கணவர் விபரீத முடிவு

Athur--Mysterious-death-incident---It-was-revealed-in-the-investigation-that-it-was-suicide-

ஆத்தூர் அருகே ஆசிரியையின் கணவர் வீட்டினுள் இரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவத்தில், திடீர் திருப்பமாக கடன் தொல்லையால் கஞ்சா போதையில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த மோகன் ஒரு ஓய்வு பெற்ற விஏஓ, இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு முருகன் ( எ ) சதீஷ் (42) என்ற மகனும் , ஒரு மகளும், 2 வது மனைவிக்கு 2 மகள்களும் உள்ளனர், அனைவருக்கும் திருமணமாகி சென்னையில் அரசு பணியில் உள்ளனர்.

விஏஓ மகன் முருகன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வனிதா ( 30 ) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார், இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். இதனிடையே குடிப்பழக்கத்திற்கு ஆளான முருகன் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

image

வனிதா தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். முருகனின் தந்தை மோகன் கிராம நிர்வாக அலுவலராக இருந்ததால் கெங்கவல்லியில் அவருக்கு நல்ல மரியாதை இருந்துள்ளது. இதனால் யாரிடமாவது அவர் பணம் கேட்டால் உடனே கொடுத்து விடுவார்கள். இதன் காரணமாக ஊரைச்சுற்றிலும் முருகனுக்கு கடன் அதிகரித்துள்ளது .

இதனால் தனது சொந்த வீட்டை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கடனை அடைக்க முருகன் முடிவு செய்து வாழப்பாடியை சேர்ந்த அமுதா என்பவரிடம் வீட்டை விற்பனை செய்வதற்கு முடிவு செய்து அவரிடம் 10 லட்சத்தை வாங்கிய முருகன் வங்கி கடன் மற்றும் உள்ளூரில் கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் மனைவியும் , மகனும் பள்ளிக்கு சென்று விட்டனர், மாலையில் அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது கணவர் முருகன் கழுத்து, கையில் வெட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் முருகன் இறந்து கிடந்துள்ளார் .

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கெங்கவல்லி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள், மேலும் சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

முருகன் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை கொலை செய்து வீட்டில் இருந்த 1.50 லட்சத்தை எடுத்து சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் அந்த கோணத்தில் போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் முருகன் சாவில் திடீர் திருப்பமாக அவர் கடன் தொல்லையால் கஞ்சா போதையில் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான முருகன் தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கடன் வாங்கி விட்டோமே என்ற மன வருத்தத்தில் இருந்துள்ளார். எனவே வீட்டை விற்று அதன் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து கடனை அடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் வீடு கைவிட்டு போகிறது என மன உளைச்சலில் இருந்த முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்து மருந்து கடைக்கு சென்று விஷம் கேட்டுள்ளார். ஆனால் அவர் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததால் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடும் என்பதால் கடைக்காரர் அவருக்கு விஷம் இல்லை என கூறியிருக்கிறார்.

இதையடுத்து கடைக்கு சென்று புதியதாக கத்தி ஒன்றை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்ற முருகன் தனது கையை அறுத்துள்ளார். அதன் பிறகு கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்து கொண்டதும் காணாமல் போனதாக கூறப்பட்ட பணமும் வீட்டிலேயே இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் கத்தி வாங்கிய கடையையும் போலீசார் கண்டு பிடித்துள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்