Published : 18,Aug 2022 12:25 PM

வரத்து அதிகம் விலை குறைவு – கொழி சாளை மீன்களை வாங்கிச் சென்ற கேரள வியாபாரிகள்

The-supply-is-high-the-price-is-low-Kerala-traders-who-bought-kozhi-salai-fish

குளச்சல், முட்டம் மீன்பிடித் துறைமுகங்களில் மலை போல் குவிந்த 'கொழி சாளை' மீன்கள் 1 கிலோ கொழி சாளை மீன் ரூ 20-க்கு விலை போன நிலையில் மீன்களை கேரளா வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில், சுமார் 7-நாட்கள் முதல் 15-நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் இரண்டு மாதங்களாக அரபிக்கடல் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் மற்றும் தொடர் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.

image

இந்த நிலையில் கடந்த வாரம் முதல் ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் படிப்படியாக கரை திரும்பி வருகின்றனர் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களுக்கு வந்த விசைப்படகுகளில் டன் கணக்கில் 'கொழி சாளை' மீன்கள் பிடிப்பட்டிருந்தன

இந்த மீன்களை விற்பனைக்காக மீனவர்கள் துறைமுகங்களில் மலை போல் குவித்து வைத்திருந்த நிலையில், மீன்களின் விலையும் கணிசமாக குறைந்து காணப்பட்டது. இந்த மீன்களை வாங்க உள்ளூர் மற்றும் கேரளா வியாபாரிகள் ஆர்வம் காட்டி குவிந்தனர்

ஒரு கிலோ கொழி சாளை மீன் சாதாரணமாக 50-ரூ முதல் 60-ரூ வரை விலை போன நிலையில் இன்று ரூ 20-க்கு விலை போனது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்