Published : 17,Aug 2022 09:24 PM

அடுத்த 5 வருடத்திற்கான கிரிக்கெட் தொடர்களின் அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!

ICC-has-released-the-schedule-of-cricket-series-for-the-next-5-years

உலக ஆடவர் கிரிக்கெட்டின் 2023-2027 வரையிலான அடுத்த 5 வருடங்களுக்கான கிரிக்கெட் தொடர்களின் முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது உலக கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

அனைத்து நாடுகளுக்கான அடுத்த 5 வருடத்திற்கான கிரிக்கெட் தொடர்களின் சுழற்சி அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது ஐசிசி. அதில் ஐசிசி இணைப்பில் உள்ள 12 நாடுகளின் அணிகள் மொத்தம் 777 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளன. அதில் மொத்தம் 173 டெஸ்ட் போட்டிகள், 281 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 323 டி20 போட்டிகள் விளையாடப்பட உள்ளன. இந்த வருங்கால சுழற்சி தொடர்களில் இந்திய அணி மட்டும் 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

More men's international cricket in 2023-27 FTP cycle

மேலும் நடப்பு ஐந்து ஆண்டுகால சுழற்சி போட்டிகள் அட்டவணையை விட தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி விளையாடப்பட இருக்கும் போட்டிகளின் எண்ணிக்கை அதிகம். முந்தைய 5 ஆண்டுகால அட்டவணையின் படி 694 போட்டிகள் நிறைவடைய உள்ளன.

இந்த சுழற்சி அட்டவணைப்படி இரண்டு சுழற்சி முறைகளில் உலக டெஸ்ட் சாம்பியன் தொடர் நடைபெற உள்ளது. மேலும் ஐசிசி தொடர்களும், இருதரப்பு தொடர்களும் மற்றும் மூன்று அணிகள் பங்கேற்கும் ட்ரை சீரிஸ் தொடர்களும் நடைபெற இருக்கின்றன.

இந்த சுழற்சி முறையின் சிறப்பம்சமாக பார்டர் கவாஸ்கர் டிரோபி எனும் டெஸ்ட் தொடரானது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இரண்டு முறை நடைபெற இருக்கிறது. கடந்த 30 வருடங்களுக்கு பிறகு இப்பொழுது தான் இரண்டு முறையாக பார்டர் - கவாஸ்கர் டிரோபி தொடர் நடைபெற இருக்கிறது.

மேலும் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பையை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்த உள்ளன.

https://twitter.com/ICC/status/1559798533741494272

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்