Published : 17,Aug 2022 03:33 PM

அனைவரையும் அரவணைத்து செல்வேன்; இசைந்து வருபவர்கள் இணைத்து கொள்ளப்படுவார்கள்- ஓபிஎஸ் சூசகம்

I-will-embrace-everyone--Those-who-tune-in-will-be-joined--OPS-hint-to-EPS

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தமக்கு சாதகமான தீர்ப்பு வெளியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “அனைவரையும் அரவணைத்துச் செல்வதுதான் தலைமைப் பண்பு, நான் அரவணைத்துச் செல்வேன். இசைந்து வருபவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.” என்று தெரிவித்தார்.

கடந்த ஜூலை 11ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதும் செல்லாததாக ஆகியுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகம் பெயர் மாற்றம் : ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிவிப்பு | OPS-EPS  Announcement that AIADMK headquarters will be renamed – News18 Tamil

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என தீர்ப்பளித்தார். அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே பொதுக்குழு அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினார்.

Madras High Court - Wikipedia

அதிமுக பொதுக்குழு செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “அதிமுகவை தொண்டர்களின் இயக்கமாக எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கினர். கட்சியில் சில நாட்களாக கட்சியில் நிலவிய அசாதாரண சூழல் குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. இது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி. தீர்ப்பால் முழுமையான வெற்றி கிடைத்து இருக்கிறது. ஒன்றரை கோடி தொண்டர்கள் நிறைந்த இந்த இயக்கத்தை யார் பிளவுப்படுத்த நினைத்தாலும் அது நடக்காது.

image

தொண்டர்கள் என்ன விரும்பினார்களோ அது நடந்து இருக்கிறது. கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும். ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வேன். அனைவரையும் அரவணைத்துச் செல்வதுதான் தலைமைப் பண்பு, நான் அரவணைத்துச் செல்வேன். இசைந்து வருபவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். பேரறிஞர் அண்ணாவின் கூற்றுப்படி தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும். அவமானங்களை தாங்கிக் கொள்ள வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து நாங்கள் நடப்போம்” என்று கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்