Published : 15,Aug 2022 10:28 PM

சிஎஸ்கே அணியை விட்டு முழுவதுமாக விலகும் ரவீந்திர ஜடேஜா?.. கசியும் முக்கிய அப்டேட்

Indian-all-rounder-Ravindra-Jadeja-will-leave-CSK-completely-

இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியை விட்டு முழுவதுமாக விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் 2022 முடிவடைந்ததிலிருந்து சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் முற்றிலும் "தொடர்பு இல்லாமல்" இருக்கிறார். 2022 ஐபிஎல் தொடரின் முதலில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால் அணியின் தொடர் தோல்விகள் காராணமாக பின்னர் பாதியிலேயே கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் அந்த விவகாரத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் ஜடேஜாவிற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் அதனால் அவர் சிஎஸ்கே அணிக்காக இனி விளையாடமாட்டார் எனவும் தகவல் வெளியாகியது.

image

பின்னர் சிஎஸ்கேவில் மேலும் 10 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்ற இதற்கு முன்னர் ஜடேஜா போட்டிருந்த பதிவை ரசிகர்கள் அனைவரும் பகிர்ந்து பதிவிட்ட நிலையில், அவர் அந்த பதிவை முற்றிலுமாக நீக்கினார். மேலும் சிஎஸ்கே தொடர்பாக போடப்பட்ட அனைத்து பதிவுகளையும் நீக்கினார். தொடர்ந்து சமீபத்தில் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிடப்பட்ட வீடியோவில் ஜடேஜா மட்டும் இடம்பெறாமல் பதிவிடப்பட்டது. 

image

இந்நிலையில் ட்ரேடிங் விண்டோ மூலம் தன்னை எடுக்க விரும்பும் அணிகள் பேச்சுவார்த்தையை தொடங்கலாம் என ஜடேஜா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சிஎஸ்கே அணியை விட்டு ரவீந்திர ஜடேஜா முழுவதுமாக வெளியேறுவது உறுதியாகியுள்ளதாக தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்