Published : 15,Aug 2022 01:38 PM

தனிமை இந்த அளவுக்கு கொடுமையானதா? - உலக பொருளாதார மன்றம் கூறியது என்ன தெரியுமா?

WEF-says-that-loneliness-is-as-toxic-as-smoking-15-cigarettes-a-day

தனிமையில் இருப்பது ஒரு நாளில் 15 சிகரெட் பிடிப்பதற்கு சமம் என உலக பொருளாதார மன்றமான WEF கூறியிருக்கிறது. நவீன உலகில் எவரும் கூட்டத்தில் அங்கமாவதோ, குடும்பங்களில் ஒன்றுக் கூடுவதையோ விரும்பாததால் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதையே முனைப்பாக இருக்கிறார்கள்.

ஆனால் இப்படி தனிப்படுத்திக் கொள்வது கொரோனா போன்ற தொற்றுநோய்களை காட்டிலும்  மிகப்பெரிய நோயாக உள்ளது என இங்கிலாந்து அரசு தெரிவித்திருப்பதாக உலக பொருளாதார மன்றம் 2019-ம் ஆண்டு வெளியிட்ட வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், “மாறி வரும் வாழ்க்கை முறை காரணமாக மக்கள் தங்களை தனிமையில் வைத்துக் கொள்வது முக்கிய காரணமாக இருக்கிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு தற்காலத்தில் இருக்கும் மக்களில் பெரும்பாலானோர் தனியாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

image

அதன்படி பிரான்ஸின் பாரில் நகரில் 50 சதவிகிதமும், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோல்மில் 60 சதவிகிதம் பேரும் தனியாகவே வசித்து வருகிறார்கள். அதேபோல ஒருவர் மட்டுமே வசிப்போரின் எண்ணிக்கை லண்டனில் இரட்டிப்பாகியிருக்கிறது. அதாவது 1960ல் 31 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

Office of National Statisticsன் அறிக்கைப்படு இங்கிலாந்தில் 75 வயதான பெரும்பாலான முதியவர்கள் தனியாகவே வசித்து வருகிறார்கள். அதில் பலரும் தங்களது உற்றார் உறவினர்களோடும், நண்பர்களோடும் ஒரு மாதத்திற்கு மேலாக பேசுவதே இல்லையாம்.

அதேபோல அமெரிக்காவில் 1985-2004ம் ஆண்டுகளுக்கு இடையே சராசரி நண்பர்களின் எண்ணிக்கை மூன்றில் இருந்து இரண்டாக குறைந்திருப்பதாகவும், நெருங்கிய நண்பர்களே இல்லாதவர்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

குடும்ப உறவினர்களுடனான உறவு மங்குவதற்கு நகரமயமாக்கல் ஒரு காரணமாக இருக்கிறது. சீனாவில் 1980-2014ம் ஆண்டுகளுக்கிடையே கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தொகை பாதியாக குறைந்திருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் நவீனமயமாக்கலும், தொழில்நுட்ப வசதிகளுமே காரணம் என குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. ஒரு வாரத்திற்கு சராசரியாக செல்ஃபோன்களுடன் 24 மணிநேரம் மக்கள் செலவிடுகிறார்கள். ஆனால் தனிமையை உணரும் நபர் மற்றவர்களை காட்டிலும் குறைவாகவே சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள்.

தனிமையில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியில் மிகப்பெரிய செலவுகள் ஏற்படுகிறது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானொமிக்ஸ் கூற்றுப்படி, இங்கிலாந்தில் ஒரு முதியவரை பராமரிக்க 6000 பவுண்ட்கள் கூடுதலாக செலவிடப்படுகிறது. அதாவது 5.7 லட்சம் ரூபாய். இதனால் மன நோயும், மன அழுத்தமே உண்டாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த 2010ம் ஆண்டில் உலகளாவிய பொருளாதாரத்தில் 2.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலருக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்தே தனிமையை வெல்வதற்கு பல நாடுகளும் பல வழிகளை கண்டுபிடித்து வருகின்றன.

அதன்படியே இத்தாலியில் மாணவர்கள் பலரும் மூத்த குடிமக்களுடன் இடம்பெயர்கின்றனர். அதன் மூலம் மலிவு விலையில் வீடுகளிலும் குடிபெயர்கின்றார்கள். இதனால் ஒருவருக்கு ஒருவர் துணையாகவும் இருக்கிறார்கள்.

இங்கிலாந்தில் தனிமையில் இருப்பவர்களின் குறைகளை நீக்குவதற்காகவே அதற்கென minister of loneliness என்ற துறையையே ஏற்படுத்தியிருக்கிறார்கள்.” என உலக பொருளாதார மன்றம் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்