Published : 15,Aug 2022 12:03 PM

காதலன் கழிவறைக்கு சென்ற நேரம் பார்த்து காதலி செய்த செயல்... லண்டன் ஏர்போர்ட்டில் பகீர்!

groom-to-be-ditched-by-his-girl-friend-at-airport-before-the-day-of-wedding

உருகி உருகி காதலித்து கரம்பிடித்த காதலர்களுக்கிடையே தன்னுடைய தேவைக்காக பழகி, ஏமாற்றி பணம் நகைகளை கொள்ளையடித்துச் செல்லும் நிகழ்வுகள் உலகின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. அப்படியான சம்பவம்தான் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் அரங்கேறியிருக்கிறது.

அதன்படி, தன்னுடைய வருங்கால மனைவியால் ஏமாற்றப்பட்டதோடு 5000 பவுண்ட்களையும் அதாவது இந்திய மதிப்பில் 4 லட்சத்து 82 ஆயிரத்தையும் எடுத்துச் சென்றிருக்கிறார் என்பது அந்த நபருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்மையில் சந்தித்த இந்த ஜோடியின் வயது நாற்பதை எட்டியிருக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்து திருமண வாழ்வில் ஈடுபடுவதற்காக நிச்சயதார்த்தமும் செய்திருகிறார்கள். நிச்சயம் நடந்த கையோடு திருமணம் செய்வதற்காக மறுநாளே இத்தாலியில் உள்ள ரோம் நகருக்கு செல்ல முற்பட்டிருக்கிறார்கள்.

image

இதற்காக லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்தடைந்திருக்கிறார்கள். அங்கு அந்த நபர் கழிவறைக்கு சென்ற நேரம் பார்த்து அவரது உடைமைகள் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு அந்த பெண் ஓட்டம் பிடித்திருக்கிறார்.

கழிவறைக்கு சென்றவர் வெளியே வந்து பார்த்தபோது அவரது வருங்கால மனைவியும் இல்லை, தன்னுடைய உடைமைகளும் இல்லை என்பதை கண்டு கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்.

இதனையடுத்து பரிதவித்துப்போன அந்த நபர் விமனா நிலைய போலீசாரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அதன்படியே நடந்த சம்பவங்கள் வெளியே தெரிய வந்திருக்கிறது. இவை அனைத்தும் ஹீத்ரோ விமான நிலையத்தின் 5வது டெர்மினலில் நடந்தவை என மெட்ரோபொலிட்டன் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட பணம் மற்றும் லக்கேஜுடன் அப்பெண் விமான நிலையத்தை விட்டு வெளியேறினாரா அல்லது விமானத்தில் ஏறி சென்றுவிட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்